மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்ப கூட்டத்திகதிகள் மாற்றப்பட்டுள்ளன.

0
175

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்துக்கான சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பக்கூட்டங்களுக்கான திகதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி இம்மாதம் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரையில் நடைபெற இருந்த கூட்டங்கள் இம்மாதம் 29ஆம் திகதி முதல் மார்ச் 03ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாகரையிலுள்ள பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் 29ஆம் திகதி மாலை 2 மணிக்கு கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் மார்ச் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வெல்லாவெளியிலுள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

அதே தினம் மாலை 2 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறும்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் மார்ச்மாதம் 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். மாலை 2 மணிக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் உறுகாமம், கித்துள், வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் விவசாயம் பண்ணும் சகல விவசாயிகளும், குத்தகைக்காரர்களும், காணிச் சொந்தக்காரர்களும் சமூகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நிருபர் –

LEAVE A REPLY