சமூகமட்ட அமைப்புகளின் வலைப்பின்னல் அமைப்பின் 5ஆம் கட்ட அமர்வு

0
163

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லாட்சி திட்டத்தின் கீழ் சமூகமட்ட அமைப்புகளின் வலைப்பின்னல் அமைப்பின் 5ஆம் கட்ட அமர்வு நேற்று (23.02.2015) வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ் ஆர் ராகுலநாயகி தலைமையில் 16 கிராம சேவகர் பிரிவிலிருந்து கலந்து கொண்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதி நிதிகள் தத்தமது கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், தேவைப்பாடுகளை முன்வைத்தனர். குறிப்பாக மாணவர் இடைவிலகல், பலதார திருமணம், வெளிநாட்டு வேலை வாய்ப்பும் அதன் தாக்கமும், இளவயது திருமணம், ஆரம்பகல்வி, குடிநீர் பிரச்சினை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டாளர் தோமஸ் கலந்து கொண்டதுடன், இதுவரை காலமும் இவ் வலைப்பின்னலால் தீர்வு காணப்பட்ட விடயங்களை வினவினார், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் பாலம் (வட்டவான்) நெல் ஆலை, யானை வேலி போன்ற விடயங்களை உதாரணங்கள் மூலம் குறிப்பிட்டனர்.

இவ் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் கங்காதரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உத்தியோகத்தர்களான கே.சுபாஸ்கரன், கே.பார்த்தீபன், யுனுவு நிறுவனத்தின் இணைப்பாளர் வி.றோகினி, அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள், கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை நிருபர்-

4a15c07e-99b2-416f-8533-fab5a6df13cf 145f2516-9b2b-44a3-8275-2dd06d7bdf19 (1) 145f2516-9b2b-44a3-8275-2dd06d7bdf19 2698a050-f4d0-40bd-a2df-1ecd36fb4431 b754b2b9-b7ea-46e7-920d-43d3be5ccb75

LEAVE A REPLY