பல்வேறு நாடுகளில் விநியோகிக்கப்பட்ட Mars Chocolateஐ Mars Company திருப்பி அழைப்பு

0
247

பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளிற்கு விற்பனை செய்த, தமது தயாரிப்புக்களை மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மாதம் அமெரிக்க மாஸ் நிறுவனத்தின், நெதர்லாந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மாஸ் சொக்லேட்டில் ஜேர்மன் நாட்டில் நபர் ஒருவரால் நுகரப்பட்ட ஸ்னிகர் வகை சொக்கலேட்டில் சிவப்பு நிற பிளாஸ்டிக் துண்டு காணப்பட்டமையே இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதன்படி இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட மில்லியன் கணக்கான சொக்கலேட் பார்கள் பாதுகாப்பு அற்றவையாக இருக்கலாம் என, கருதப்படும்நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, நெதர்லாந்தின் மார்ஸ் கூட்டுறவு விவகார இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த தயாரிப்பு வரிசையில் உருவாக்கப்பட்ட ஏனைய சொக்கலேட்களிலும் இவ்வாறான பிளாஸ்டிக் துண்டுகள் இருக்குமா? என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளது எனவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY