சாக்லெட் சாப்பிட்டால் அறிவாற்றல் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

0
196

அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் அறிவாற்றல் பணிகளை சிறப்பாக செயல்பட உதவும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம், லக்ஸம்பர்க் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து சாக்லெட் சாப்பிடுவதால் மூளையில் ஏற்படும் ஆய்வை மேற்கொண்டன. 23 முதல் 98 வரையிலான வயது கொண்ட 1000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சாக்லெட் உண்பதால் அவர்களது மூளையில் ஏற்படும் மாற்றங்களை அளவிட, அந்த 1000 பேரும் பல்வேறு வகையான அறிவுத் திறன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்தப் பரிசோதனைகளில், வரத்திற்கு ஒருமுறையோ அல்லது அதற்கு மேலோ சாக்லெட் சாப்பிடுவதால் வடிவங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், உடனடி நினைவாற்றல், பரிசோதித்தல், சிறந்த தீர்வு காணுதல் போன்ற மூளையின் பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சாக்லெட்டால் இதய நாளங்களுக்கு ஏற்படும் பலன்கள் குறித்து ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது சாக்லெட் சாப்பிட்டால் அறிவாற்றல் அதிகரிக்கும் என்ற தகவல் சாக்லேட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

LEAVE A REPLY