முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் பாராளுமன்றம்: பாகிஸ்தான் சாதனை

0
174

உலகில் முதன்முதலாக முழுவதும் சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தும் நாடாளுமன்றம் என்ற பெருமையை பாகிஸ்தான் பாராளுமன்றம் பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது நேற்று (23) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சீனா 55 மில்லியன் டாலர் நிதி உதவியோடு பாராளுமன்றக் கட்டடம் முழுவதும் சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த எளியமையான விழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த வசதியைத் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் ஷெரீப் ”பொதுத்துறை அலுவலகங்களும், தானியார் நிறுவனங்கலும் இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சூரிய மின்சக்திக்கு மாற வே‌ண்டும். மேலும் இந்த திட்டம் பாகிஸ்தான் – சீனாவுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

(Maalaimalar)

LEAVE A REPLY