கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்ற எடுக்கும் முயற்சியானது அம்பாரை மாவட்டத்தின் கரையோர தமிழ்,முஸ்லிம் மக்களை பாதிக்கும் செயலாகும்

0
185

-எம்.எம்.ஜபீர்-

கல்முனை பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடந்த வருடம் 35 இலட்சம் ரூபாவினை வருமானமாக அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இதனைமூடவேண்டிய எந்ததேவையும் இல்லை. அவ்வாறு மூடி வேறு இடங்களுக்கு இடமாற்ற எடுக்கும் முயற்சியானது அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் மக்களை பாதிக்கும் செயலாகும். இவ்வாறு இன்று (23)இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்புபணியகங்கள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சமர்பித்த தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அங்குதொடந்து உரையாற்றுகையில், அம்பாரை கரையோரப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சி அற்றவர்களாக காணப்படுவதினால் கண்டி, கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்புபணியகத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் போது சிங்கள மொழி தெரிந்தவேறு ஒருவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள்.

இதைவேளை இப்பிரதேசத்தில் காணப்படும் வேலை வாய்ப்பு பணியகங்கள் இடமாற்றப்பட்டால் தூர இடங்களிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்திற்கு தமது தேவைகளை நிறை வேற்றசெல்லும் பொதுமக்கள் விடுதிகளில் தங்கி மேலதிக வீனான பண செலவு களையும், நேரவிரயத்தையும் மேற்கொள்ளும் நிலைக்குள்ளாக்கப்படுவார்கள்.

ஆகையால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இது விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தி கிழக்கு மாகாண மக்களுக்கு குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்களுக்கு துரித தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அத்துடன் இதுதொடர்பில் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டு மெனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY