களைகட்டும் ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் நாளை மோதல்

0
128

முதல்முறையாக 20 ஓவர் ஆட்டமாக நடத்தப்படுப்படும் ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
ஆசியக்கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தப்போட்டி ரவுண்டு ராபின் முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

டி20 உலகக்கிண்ணம் நடைபெற இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இந்த தொடர் ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி தொடரில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகின்றன.

சமீபத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றி நம்பிக்கையுடன் உள்ளது.

இருப்பினும் சொந்த மண்ணில் வங்கதேச அணி சவால் கொடுக்கும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கும்.

ஏற்கனவே அந்த அணியிடம் இந்தியா அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருந்தது. இதனால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.

மேலும், டோனிக்கு திடீரென்று முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் நாளையப் போட்டியில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான பார்த்திவ் படேல் மாற்று வீரராக களமிறங்கலாம்.

துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ரெய்னா ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மொர்தாசா தலைமையிலான வங்கதேச அணியில் சகீப்–அல்–ஹசன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, இம்ருல்கய்ஸ், நாசிர் உசேன், சபீர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இதனால் வங்கதேச வீரர்களும் இந்திய அணிக்கு சமமாக சவால் கொடுப்பர் என்பதால் நாளைப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா:-

டோனி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, ஷிக்ர் தவான், விராட் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, ரஹானே, ஹர்பஜன் சிங், பவான் நெகி, புவனேஸ்வர் குமார், பார்த்தீவ் பட்டேல்.

வங்கசேதம்:-

மொர்தாசா (அணித்தலைவர்), இம்ருல் கயூஸ், சவுமியா சர்கார், சகீப்–அல்–ஹசன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, அபுஹைதர், அல்–அமீல் உசேன், அராபாத் சன்னி, முஸ்டாபிசுர் ரகீம், நாசிர் உசேன், சபீர் ரகுமான், நூருல் ஹசன், தக்ஷின் அகமது, மிதுன்.

LEAVE A REPLY