மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு

0
198

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு கடந்த 02.02.2016 அன்று அப்றார்நகர் 167B கிராம உத்தியோகஸ்தர் பிரிவில், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் போது வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்ற மிகவும் தேவைகள் உடைய அப்பிரதேச மக்கள் சிலரின் இல்லங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு அவர்களின் நிலைமைகளை கண்டறிய தீர்மானம் எடுக்கப்பட்டது, அதன்பிரகாரம் கடந்த சனிக்கிழமை (20.02.2016) அப்றார்நகர் பிரதேச மக்களின் இல்லங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விஜயங்களை மேற்கொண்டார்.

அதன்போது கருத்து தெரிவித்த அவர், காத்தான்குடி நகரின் பிரதான வீதி, மற்றும் சில பகுதிகளை வளப்படுத்தி காத்தான்குடி நகரமே செழிப்படைந்துள்ளது போன்று காணப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உண்மை நிலைமை அவ்வாறு இல்லை என்னவெனில் இன்று அப்றார் நகர் பிரதேச வீடுகளுக்கு சென்றபொழுது அங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்டோம்.

அதிகமானோர் அடிப்படை வசதிகள் இன்றியும், வீடுகள் அரைகுறையாகவும், சுகயீனமுற்றும். கல்வியை தொடரமுடியாமலும், அன்றாட வாழ்க்கையினை நடத்துவதற்கு போதிய வருமானம் இன்றியும், வீதிகள் செப்பனிடப்படாமலும் இன்னமும் பல குறைபாடுகளுடன் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதேபோன்று பல பிரதேசங்கள் காத்தான்குடி நகரிலும்மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் காணப்படுகின்றதென தெரிவித்தார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மலர்ந்துள்ள இந்த நல்லாட்சியில் நாட்டை கட்டி எழுப்புகின்றோம் என்று கூறிகொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இனபாகுபாடின்றி ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக செல்லவேண்டும்.

அங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து கிராமங்களை வளப்படுதுவதுடன் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின் துயர் துன்பங்களை துடைக்க வேண்டும். அதன் மூலம் நாட்டில் ஒற்றுமையுடன் சுபீட்சமான சமூதாயத்தினரை உருவாக்கி நம் இலங்கை தாய் திருநாட்டை வளமிக்கதோர் நாடாக கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டுமென தனதுரையில் தெரிவித்தார்.

5fc4b51c-07a2-4aa7-99d9-8d5407237b53 d6a92d5f-83a4-4eaa-a92c-03a0ecd6966a d9630612-fa8e-4da8-9818-3f1c95822d2e da11f712-b535-4072-97a4-fb0870d80bd9 ddcb1f68-5176-4de6-a8f6-90da8779cfda

LEAVE A REPLY