சு.க. முஸ்லிம் பிரிவுக்குள் பிளவுகள் இல்லை : பௌஸி

0
186

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரி­வுக்குள் எவ்­வித பிள­வு­க­ளு­மில்லை. முஸ்­லிம்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை வெறுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கரங்­க­ளையே பலப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வரும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு மஹிந்த ராஜபக் ஷ அணி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி என பிள­வு­பட்­டுள்­ள­தாக பரப்­பப்­பட்டு வரும் செய்­தியை மறுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பத­வியில் இருக்­கிறார். முஸ்­லிம்கள் எப்­போதும் தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். இத­னையே மார்க்­கமும் வலி­யு­றுத்­து­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு உரிய பாது­காப்பும், மத உரி­மை­க­ளையும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் மாத்­தி­ரமே வழங்க முடியும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல நட­வ­டிக்­கைகள் இன­வாத குழுக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நாம் இக்­கட்­டான நிலை­யி­லேயே இருந்தோம்.

முஸ்­லிம்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷ மீது வெறுப்­ப­டைந்­த­னா­லேயே அவரை பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்குப் பங்­கா­ளர்­க­ளாக செயற்­பட்­டார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நம்­பிக்கை வைத்து அவரை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­தார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்கிக் கொண்­டி­ருந்த அன்­றைய ஜனா­தி­ப­தியின் பக்கம் முஸ்­லிம்கள் ஒரு­போதும் சேர்ந்து கொள்­ள­மாட்­டார்கள்.

முஸ்­லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவின் அணியில் சேர்ந்து கொள்­ளப்­போ­கி­றார்கள் என்றால் அதைத் தடுக்­கவும் எம்மால் முடி­யாது. முஸ்­லிம்­களில் ஒரு சிலர் மஹிந்­தவை ஆத­ரிக்­கி­றார்கள் என்­ப­தற்­காக முஸ்­லிம்கள் அணி அணி­யாக மஹிந்­தவின் பக்கம் சேர்­கி­றார்கள் என அறிக்­கை­விட முடி­யாது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு கட்­சியின் முன்னாள் உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் தற்­போ­தைய பத­வியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி எதிர்கால அரசியல் நிலைமை தொடர்பில் விளக்கங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY