தேசிய உற்பத்தித்திறன் விருது 2014: காத்தான்குடி பிரதேச செயலகம் விசேட விருதினை பெற்றது

0
324

2014ம் ஆண்டின் பொது நிர்வாக அமைச்சின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் விருது – 2014 இற்கான போட்டியில் அரச துறை வகுதியின் கீழ் பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் தேசிய ரீதியாக காத்தான்குடி பிரதேச செயலகம் விசேட விருதினை பெற்று காத்தான்குடிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கான விசேட கௌரவ விருது கடந்த 18-02-2016ம் திகதி வியாழக்கிழமை உற்பத்தித் திறன் செலகத்தின் மாநாட்டு மண்பத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் செயலகத்திற்கான உற்பத்தித் திறன் விருதினை உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர் பெற்றுக் கொள்வதையும் அதனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதையும் படங்களில் காணலாம்.

01f7f872-17bb-4f87-bc1b-e453b785e38f 2f2b1e48-7d69-4d63-adb7-c970c0f4892a 8d3258a1-300c-4ff6-bff1-6be8d99f933c 899baef1-cef2-4bea-945d-19146897593a ad4b61b2-e8dc-4e86-adc8-161a10cc13ae

LEAVE A REPLY