ஞானசார தேரர் பிணையில் விடுதலை

0
197

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு லட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் தேரரை விடுதலை செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்கா திசாநாயக இன்று உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்கு அழுத்தம் மேற்கொள்வதும் வெவ்வேறு இடங்களில் பல்வேறு அறிக்கைகளை விடுவதையும் தடை செய்து நிபந்தனை விதித்த நீதவான் குறித்த வழக்கை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY