அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பைபாஸ் சத்திர சிகிச்சை

0
163

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பைபாஸ் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாளை சுகாதார அமைச்சருக்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையில் பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிங்கப்பூரில் கடமையாற்றி வரும் இலங்கை மருத்துவ நிபுணரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 19ம் திகதி அமைச்சருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிங்கப்பூரிலிருந்து தருவிக்கப்பட் விசேட விமானமொன்றின் மூலம் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை, அமைச்சர் வழமையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் வேறும் பிரச்சினைகள் கிடையாது எனவும் அவரது இணைப்புச் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரும் பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-IM-

LEAVE A REPLY