லசந்த படுகொலை தொடர்பான ஆவணங்கள் இரு முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர்களால் அழிப்பு

0
126

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் உட்பட முக்கிய விசாரணைகள் காணப்பட்ட ஆவணங்களை இரு முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர்கள் அழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்ட நபர்கள் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களையே இவர்கள் அழித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்பான ஆவணங்களே அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ET-

LEAVE A REPLY