(Photo) குருக்கள்மடத்தில் பெண்ணின் சடலம் மணலில் புதைந்திருந்தவாறு மீட்பு

0
221

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இருந்து இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் சுமார் 40 வயதுடையவராக இருக்கும் என தெரிவித்த பொலிஸார் இச்சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இப்பகுதியில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

166cf0b4-fd8f-4dfb-9799-9a1f4c94d9bd 4214c211-d31e-4025-b2e6-bfede0471714 6322c310-9da2-4c40-8c0d-1ac4085c41e1

LEAVE A REPLY