பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்

0
55

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து, விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவருடன் அவரது சகோதரர் மற்றும் இருவருக்கும் விளக்கமறியல் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY