மீண்டும் முதலிடம் பிடித்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ்

0
91

2016-ம் ஆண்டிற்கான சிறந்த பிராண்டுகளின் தரவரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் வணிகம் என்ற இரண்டு பிரிவுகளில் உள்ள சிறந்த பிராண்டுகளின் பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து முழுவதும் சுமார் 2500 பேரிடம் பிராண்டுகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 1600 போட்டியாளர்களுக்கு இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதலிடத்தை பிடித்து வருகிறது. நுகர்வு மற்றும் வணிகம் இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து ரோலக்ஸ் வாட்ச் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லெகோ 3-வது, டைசன் 4-வது இடங்களிலும், ஜில்லெட் நிறுவனம் 5-வது இடத்திலும் உள்ளது

ஆப்பிள் நிறுவனம் 7-வது இடத்திலும், கூகுள் 16-வது இடத்திலும், அமேசான் நிறுவனம் 19-வது இடத்திலும் உள்ளது.

இந்த ஆய்வில் பிபிசி நிறுவனம் மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது. முதல் முறையாக முதல் இருபது இடங்களுக்கு வெளியே பிபிசி தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், சென்ற ஆண்டு 4-வது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனமும் பின்னுக்கு சென்றுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பென்சார், ஹெயின்ஸ், ஜாக்குவார் உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் முதல் இருபது இடங்களுக்குள் வந்துள்ளன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தவிர்த்து விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் மட்டும் 17-வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY