முடிவுக்கு வந்தது காஷ்மீர் முற்றுகை

0
147

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் பயிற்சி நிலையம் ஒன்றை, ஏராளமான ஆயுதங்களுடன் ஆக்கிரமித்திருந்த தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக, இந்தியப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறை துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தொடரணி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய பிறகு, தலைநகர் ஸ்ரீநகருக்கு அருகிலிருக்கும் பாம்போர் நகரிலுள்ள அந்தக் கட்டிடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்தனர்.

அந்தக் கட்டிடத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததில்,குறைந்தது ஐந்து பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

நேற்று, அப்பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பிரிவினை ஆதரவு இளைஞர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

LEAVE A REPLY