(Video) எதற்காக ஹாரூன் சஹ்வி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினை பகிரங்காமாக விமர்சித்தார்.!???

0
141

கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற விடயமான அல்- கிம்மா இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்வியினால் புதிதாக அஸ்-சபீல் எனும் பெயருடன் ஜும்மா பள்ளிவயால் நிர்மாணிக்கப்பட்டு அதில் ஜும்மா தொழுகை நடாத்தப்பட்டு வரும் விடயமாகும்.

ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இப் பள்ளிவாயலானது ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் அமைந்திருக்கின்ற எல்லைக்குள் காணப்படுவதினால் இரண்டு ஜும்மா தொழுகைக்கான தேவைப்பாடு கிடையாது என்றும், இவ்வாறான செயலானது சமூகத்தினை பிளவுபடுத்தக் கூடியது என்றும் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நிருவாகம் பகிரங்கமாக ஹாரூன் சஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயலுக்கு கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றது.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் வாய்த்தர்க்க பிரச்சனையாகவும் மாறிய இவ்விடயமானது பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டு நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கும் கொண்டு செல்லப்படிருந்தனை நாம் சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடிய செய்தியாக இலங்கையில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பேசப்படுகின்ற முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகின்றது..

தொடர்ந்து ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவயல் நிருவாகத்தின் எதிர்பினை தாண்டி சுமார் 20 ஜும்மா தொழுகைகளை சாதாரனமாக ஏனைய பள்ளிவாயல்களில் இடம் பெறுகின்ற கொத்பாக்களை போன்றல்லாது சவூதி அராபியாவில் இடம் பெறுகின்ற கொத்பாக்களை போன்று குறுகிய நேரத்தில் முற்றிலும் தமிழ் மொழியில் குறித்த புதிய ஜும்மா பள்ளிவாயலில் கொத்பா நடாத்தப்பட்டுகின்றது.

மூன்று மாடிகளை கொண்ட இப் புதிய ஜும்மா பள்ளிவாயலில் ஒவ்வொரு கிழமையும் ஜும்மா தொழுகைக்காக மக்கள் அதிகரித்து கொண்டு வருகின்றமை ஒரு புறமிருக்க, ஜும்மா தொழுகையானது நெருங்குகின்ற வேலையில் தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட குறித்த பள்ளிவாயலுக்கு முன்பாக வீதி ஓரத்திலும் அதிகமானவர்கள் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவதானிக்க கூடியதாகவும் இருந்து வருகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக ஹாரூன் சஹ்வியின் புதிய பள்ளிவாயலில் பொலீஸ் பாதுகாப்புடன் ஜும்மா தொழுகையானது நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது ஓட்டமாவாடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் அமைந்துள்ள எல்லைக்குள் இரண்டு ஜும்மா தொழுகைகள் இடம் பெறுவதினை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே குறித்த ஹாரூன் சஹ்வியினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயலில் இடம் பெறுகின்ற ஜும்மா தொழுகையினை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஃபத்துவாவாக எழுத்து மூலமான கட்டளையான ஒன்றினை கடந்த ஒரு கிழமைக்கு முன்பு அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் சஹ்விக்கு அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் புதிய ஜும்மா தொழுகையினை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஃபத்துவா உடனான கட்டளையினை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கித்தள்ளிய ஹாரூன் சஹ்வி கடைசியாக 19.02.2016 வெள்ளிக்கிழமை வழமை போன்று தனது புதிய பள்ளிவாயலில் பரபரப்புக்களுக்கு மத்தியில் வழமைக்கு மாறாக அதிகப்படியான ஜும்மா தொழுகையாளிகளின் வருகையுடன் வாழைச்சேனை பொலிசாரின் பாதுகாப்பின் உதவியுடன் ஜும்மா தொழுகையினை நடாத்தினார்.

தனது கொத்பா பிரசங்கத்தில் கூட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் வழங்கப்பட்ட ஃபத்துவாவையும் அவர்களுடைய கட்டளையையும் பகிரங்கமாக விமர்சித்த ஹாரூன் சஹ்வி, தான் இப் புதிய பள்ளிவாயலில் ஜும்மா தொழுகை நடாத்துவதினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென்று ஆணித்தரமாக தனது கொத்பா பிரசங்கத்தில் தெரிவித்தார்.மேலதிக தகவல்கள் கானொளியில் இணைக்கப்பட்டுள்ளது.

– அஹமட் இர்ஸாட்-

LEAVE A REPLY