யோசித்த கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது: சஷீந்திர ராஜபக்ஷ

0
260

யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம் என சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான சஷீந்திர ராஜபக்ஷ தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

யோசித்த விவகாரம் குறித்து நேர்காணலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெறுமனே குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிலும் யோசித்த கைது செய்யப்பட்டது சிறந்த விடயமேயாகும்.

இதன் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அதன் பின்னர் அவர் எந்தவித குற்றச்சாட்டுகளும் அற்றவராக விடுதலை செய்யப்படுவார். அதன் மூலம் பொதுமக்களும் இது தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

-ET-

LEAVE A REPLY