அஷ்ரப் தனி முஸ்லிம் மாகாணத்தைக் கோரவில்லை: அமான் அஷ்ரப்

0
200

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தனி முஸ்லிம் மாகாணத்தைக் கோரவில்லை என மர்ஹூம் அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

தமது தந்தை எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய இலங்கை என்ற கோட்பட்டை மீறவில்லை எனவும், பிளவடையாத இலங்கைக்குள் தீர்வுத் திட்டங்கள் எட்டப்பட வேண்டுமென விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நலன்களுக்காக வரலாற்று உண்மைகளை மாற்றியமைக்க வேண்டாம் என அமான், சேகுதாவூத்திடம் கடிதம் ஊடாக நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கும்அவ்வாறான ஓர் அலகு வழங்கப்பட வேண்டுமென அஷ்ரப் ஆரம்ப காலங்களில் கோரிய போதிலும் பின்னர் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY