பிஜி தீவை சூறையாடிய புயல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

0
130

தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியை கடந்த சனிக்கிழமை கடும் புயல் சூறையாடியது. மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

மின் இணைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சாலைகள் முழுவதும் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடப்பதோடு கண்ணாடிகள், இரும்பு தகடுகள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களும் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வின்ஸ்டன் என்ற இந்த புயலுக்கு இதுவரை அங்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதற்குமான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. அங்கு 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY