சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவுக்குள்ளும் பிளவு

0
226

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரி­வுக்­குள்ளும் மஹிந்த அணி, மைத்­தி­ரி­ அணி என பிளவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஒரு பிரி­வினர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய கட்­சியில் இணைந்து கொள்­ள­வுள்­ள­தாகவும் குரு­நாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அமைப்­பா­ளரும் குரு­நாகல் மாந­கர சபை உறுப்­பி­ன­ரு­மான அப்துல் சத்தார் தெரி­வித்தார்.

இதேவேளை, எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் புதிய அர­சியல் கட்­சி­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என்றும் அவர் தெரிவித்தார்,

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்தி குழு­வி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சில கட்­சி­களும் ஐக்­கிய தேசிய கட்­சியின் மீது அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள கட்­சி­களும் இணைந்து இந்த புதிய கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சியல் கட்சி அமைப்­பது தொடர்பில் மும்­மு­ர­மாக செயற்­பட்­டு­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில் ‘ புதிய அர­சியல் கட்­சி­யொன்று அமைப்­பது தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவு­டனும் மற்றும் பல அர­சியல் கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

புதிய அர­சியல் கட்சிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் மதத்தலைவர்களின் ஆதரவுகளையும் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY