இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

0
122

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இங்கிலாந்து அணிக்கு பட்லர் (54), அணித்தலைவர் மோர்கன் (38), ரூட் (34) ஆகியோர் அதிரடி காட்டினர்.

ஆனால் மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 19.4 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், அம்லா அதிரடி காட்டினர்.

டிவில்லியர்ஸ் இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தார். அவர் 29 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இருந்த அம்லாவும் அதிரடியால் அரைசதம் கடந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 14.4 ஓவரில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

அம்லா 38 பந்தில் 69 ஓட்டங்களுடனும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), அணித்தலைவர் டுபிளசி 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY