முஸ்லிம் எதிர்ப்புக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ

0
221

நான் இன­வா­தி­யல்ல. என்னை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து தூரப்­ப­டுத்­து­வ­தற்கு சதித்­திட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன. இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்கள் விழிப்­புடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம்­பெற்ற அநீ­தி­க­ளுக்கு நான் பொறுப்­பில்லை. என்­னு­டைய ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம்பெற்­ற­தாக கூறப்­படும் அநீ­திகள் என்னை மீறி நடை­பெற்­ற­வை­யாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் இடையில் வெள்­ளிக்­கி­ழமை இரவு மல்­வானை உல­ஹிட்­டி­வ­லயில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
என்­மீது இன­வாத முத்­திரை குத்தி எனக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் நில­விய நல்­லு­றவை சீர்­கு­லைக்க சதித்­திட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன. இதற்கு சர்­வ­தே­சமும் உத­வி­யுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுடன் நான் ஆரம்­ப­காலம் முதல் நல்­லு­றவை பேணி­வந்­துள்ளேன்.
சர்­வ­தேசம் என்னை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பிரிப்­ப­தற்கு முன்பு எனக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு இடையில் பல­மான உறவுப் பாலம் அமைந்­தி­ருந்­தது. எனது ஆட்சிக் காலத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு பல­மான அர­சியல் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது.

முஸ்­லிம்கள் பலர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் நிய­மனம் பெற்­றார்கள்.

என்­றாலும் சர்­வ­தேசம் நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவன் என இன­வாத முத்­திரை குத்தி தனது காரி­யத்தைச் சாதித்துக் கொண்­டது.

என்­னி­ட­மி­ருந்து ஆட்­சியைக் கைப்­பற்றி சர்­வ­தே­சத்­துக்கு சார்­பான ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் அதனைக் கைய­ளிப்­ப­தற்கு சர்­வ­தேசம் வகுத்த திட்­டமே இது­வாகும். இந்த சதித்­திட்­டத்தில் சர்­வ­தேசம் வெற்றி பெற்றுக் கொண்­டது.

இந்த அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாகக் கூறிய உறு­தி­மொ­ழிகள் எத­னையும் நிறை­வேற்­ற­வில்லை. தொடர்ந்தும் நழுவல் போக்­கையே மேற்­கொண்டு வரு­கி­றது. நெல்­லுக்கு வழங்­கு­வ­தாக கூறிய உத்­த­ர­வாத விலை இப்­போது வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

நாளாந்தம் மக்கள் என்­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொள்ளும் போது இது தொடர்­பாக முறை­யி­டு­கின்­றனர்.

இதன்­போது நான் அவர்­களை அமை­தி­யாக இருங்கள். மீண்டும் சேவை செய்­வ­தற்­கான காலம் நெருங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறுவேன்.

மேலும் முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக சர்­வ­தேச ரீதியில் குரல் கொடுத்து வந்­தது நான் தான். குறிப்­பாக பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக நான் தொடர்ந்து குரல் கொடுத்­துள்ளேன்.

என்­னு­டைய ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம் பெற்­ற­தாக கூறப்­படும் அநீ­திகள் என்னை மீறி நடை­பெற்­ற­வை­யாகும். அதற்கு நான் எந்­த­வ­கை­யிலும் பொறுப்­பில்லை.

தேர்தல் தோல்­விக்கு பிறகு முஸ்லிம் கிராமம் ஒன்று என்னை வர­வேற்­றது இது முதற்­த­ட­வை­யாகும். இந்த சந்­திப்­பா­னது ஏனைய முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கு சென்று சந்­திப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு எனக்கு பெரும் சக்­தி­யாகும்.

அத்­துடன் நான் மேற்­கொண்டு வந்த அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்­தி­னார்கள். தற்­போது சீனா­வுக்கு சென்று மண்­டி­யி­டு­கின்­றனர். தடைப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கூறிவருகின்றனர்.

எனவே முஸ்லிம் மக்­க­ளு­ட­னான இந்த சந்­திப்பு எனது அர­சியல் பய­ணத்­துக்கு பெரும் சக்­தி­யாக இருக்­கின்­றது. முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து என்னை தூரப்­ப­டுத்­து­வ­தற்கு தொடர்ந்து சதித்­திட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன. இது­தொ­டர்பில் முஸ்­லிம்கள் விழிப்­புடன் இருக்க வேண்டும்.

நல்­லாட்சி அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளது அர­சியல் அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வ­தற்­கான திட்­டங்­களைத் திரை­ம­றைவில் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

என்­மீது முஸ்­லிம்கள் மீதான இன­வா­தி­யென்று முத்­திரை குத்தி ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொண்டு இப்­போது மிக சூட்­சு­ம­மாக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை குறைத்து விடு­வ­தற்கு திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

சர்­வ­தேசம் என்னை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பிரிப்­ப­தற்கு முன்பு எனக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு இடையில் பல­மான உறவுப் பாலம் அமைந்­தி­ருந்­தது. என் ஆட்சிக் காலத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு பல­மான அர­சியல் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது. முஸ்­லிம்கள் பலர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் நிய­மனம் பெற்­றார்கள் என்­றாலும் சர்­வ­தேசம் நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவன் என இன­வாத முத்­திரை குத்தி தனது காரி­யத்தைச் சாதித்துக் கொண்­டது.

இந்த நல்­லாட்சி அரசு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கு­வ­தாகக் கூறிய உறு­தி­மொழி எத­னையும் நிறை­வேற்­ற­வில்லை.

தொடர்ந்தும் மழுப்­ப­லையே மேற்­கொண்டு வரு­கி­றது. இப்­போது சிறு­பான்­மை­யினர் அர­சாங்­கத்தின் மீது வெறுப்­ப­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து என்னை நீக்கி விடு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருக்கும் சிரேஷ்­ட­மா­னர்­களும் பொதுத் தேர்­தலில் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டு தோல்­வி­ய­டைந்­த­வர்­களும் இந்த முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

நான் ஒரு­போதும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்த போவ­தில்லை. நான் கட்சி தாவுப­வ­னல்ல. கட்­சியை உயி­ரிலும் மேலாக நேசிப்­பவன். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­யுள்ளார். கட்­சி­யி­லி­ருந்தும் என்னை நீக்­கி­வி­டு­வ­தற்கே நான் கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி வரு­வ­தாகக் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இன்று அர­சுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­களின் அர­சியல் அதி­கா­ரங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் என்ன நடக்கப் போகி­றது என்­பதை விரைவில் அவர்கள் உணர்ந்து கொள்­வார்கள்.

அர­சாங்­கத்தின் கொள்­கை­களில் வெறுப்­ப­டைந்த பலர் இன்று இணைந்த எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர்.

புதியதோர் கட்சி அமைக்கப்பட்டு எதிர்கால தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டுமென்பது பரவலாகப் பேசப்படுகிறது என்றாலும் புதியதோர் அரசியல் கூட்டணி இதுவரை உருவாக்கப்படவில்லை. அது எதிர்காலத்தில் சாத்தியமாகும் என நினைக்கிறேன் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY