பாகிஸ்தானில் நிலநடுக்கம்

0
141

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

அங்கு 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலை பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் அப்பர் டிர், லோயர் டிர், சுவாத் மற்றும் பஜாயுர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

LEAVE A REPLY