வடகொரியாவின் அமைதி ஒப்பந்த முயற்சியை நிராகரித்தது அமெரிக்கா

0
146

கொரியன் பெனிசுலா பிரச்சனை தொடர்பான வடகொரியாவின் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு மட்டுமல்லாமல், நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை ஏவி உலகநாடுகள் மத்தியில் வடகொரியா கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அதன் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவும் கூட கண்டனம் தெரிவித்தது. மேலும், ஐ.நா.வின் தடையையும் மீறி வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து, அணுகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் ஏவுகனை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு தண்டனையாக ஆசிய நாடுகளில் இருந்து தனிமைபடுத்தும் பொருட்டு அந்நாட்டு மீது அமெரிக்கா சில தினங்களுக்கு முன்பு புதிய தடை விதித்தது.

இதனிடையே, கொரிய அமைதி ஒப்பந்தத்திற்காக சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கு அமெரிக்க நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக வால்ட் ஸ்டீட் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்நிலையில், வடகொரியாவின் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை முயற்சியை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அணு ஆயுத குறைப்பை வடகொரியா செயல்படுத்தாததால் தான் இதற்கு காரணம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் தொடர்பான தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.

LEAVE A REPLY