அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப், நெவாடாவில் ஹிலாரி வெற்றி

0
185

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது.

தெற்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். நியூஹாம்சயர் மாகாணத்தை தொடர்ந்து தெற்கு கரோலினா மாகாணத்திலும் வெற்றி பெற்றிருப்பது, டிரம்பிற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

நெவாடா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். தனது எதிரியான பெர்னி சாண்டர்சை அவர் வீழ்த்தினார். இதன் மூலம் நியூஹாம்சயர் மாகாணத்தில் தன்னை வீழ்த்திய சாண்டர்சை அவர் பழி தீர்த்துக்கொண்டார்.

நெவாடா மாகாணத்தில் தன்னை தோற்கடித்த ஹிலாரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாண்டர்ஸ் பாராட்டு தெரிவித்தார்

LEAVE A REPLY