வறிய மாணவர்களுக்கு காலணி வழங்கிவைப்பு

0
258

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 100 வறிய மாணவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காலணிகள் வழங்கும் நிகழ்வு 19.02.2016 ஆந் திகதி கமு/அல்-ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சமூக கல்வி அபிவிருத்தி ஒன்றியம் (SEDO) அமைப்பினால் நடாத்தப்பட்டது.

இவ்வமைப்பின் ஸ்தாபகரும் சாய்ந்தமருது 15,17 ஆம் பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தருமான எல். நாஸரின் வழிகாட்டலில் ரீ.கே.எம். சிறாஜ் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், விசேட அதிதிகளாக இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக பொறியியற் பீட விரிவுரையாளர் ஏ.எம். சிமர், பொறியியலாளர் கமால் நிஸாட் மற்றும் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நழீர், பிரதேச பாடசாலை அதிபர்களான எம்.எஸ். நபார், எம்.ஐ.எம். இல்யாஸ்,எம்.ஐ. சம்சுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். றிஸான், அபுல் ஹுதா ஆகியோருடன் பல பிரமுகர்களும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 – எம்.எஸ்.எம்.சாஹிர்

LEAVE A REPLY