மற்றொரு பலஸ்தீனர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை

0
163

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நப்லுஸ் நகருக்கு அருகில் இருக்கும் சோதனைச்சாவடியில் இஸ்ரேலிய வீரரை கத்தியால் தாக்க அணுகிய போது பலஸ்தீனர் சுடப்பட்டார் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு எந்தவொரு இஸ்ரேலியருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட படத்தில் குறித்த பலஸ்தீனரின் முகத்தில் துப்பாக்கி காயம் காட்டிருப்பது தெரிகிறது.

துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற நேரத்திலேயே பலஸ்தீன செம்பிறை அம்புலன்ஸ் வண்டி அங்கு விரைந்தபோதும் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அடைய மறுக்கப்பட்டதாக செம்பிறை சங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டில் நேற்று மேற்குக் கரையில் பலஸ்தீன சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனைச் சாவடி பகுதியில் அந்த சிறுமி கத்தியுடன் இருப்பதை கண்டே கைது செய்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகளில் கடந்த ஒக்டோபர் தொடக்கம் நீடிக்கும் பதற்ற சூழலில் இதுவரை 170க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY