காற்றில் விம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

0
168

சிறிய புரொஜெக்டர்களின்(Projector) ஊடாக பெரிய திரைகளில் விம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. இவ்வாறிருக்கையில் திரைகள் இன்றி காற்றிலேயே விம்பங்களை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை மிட்சுபிஸி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Aerial Display எனப்படும் இத் தொழில்நுட்பத்தின் ஊடாக 142 சென்ரிமீற்றர்கள் வரையான விம்பங்கள் உருவாக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நிழற்படங்கள் மட்டுமின்றி, வீடியோ காட்சிகளின் விம்பங்களையும் காற்றில் உருவாக்கக்கூடிய இத் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2020ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தொழில்நுட்பம் செயற்படும் விதத்தினை விளக்கும் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY