இலங்கை – இந்திய போட்டியை அதிகம் பேர் பார்த்து சாதனை

0
61

இந்தியா- – இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடந்த இருபது-20 தொடரின் 2ஆவது போட்டி அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது-20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்தியா தொடரை 2- -1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் ராஞ்சியில் நடந்த 2ஆவது போட்டியை அதிக ரசிகர்கள் தொலைக்காட்சியின் மூலம் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் இது புதிய சாதனையாகும். இந்தப் போட்டியை 256 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களுரில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை 112 மில்லியன் பேர் பார்வையிட்டதே சாதனையாக இருந்தது.

ராஞ்சியில் நடந்த 2ஆவது இருபது -20 போட்டியை டோனி தலைமையிலான இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY