மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு போப் ஆண்டவர் வேண்டுகோள்

0
237

வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று பேசினார். அப்போது அவர், “மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை ஆளுகிறவர்களின் மனசாட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்களை கொல்லக்கூடாது என்கிற கட்டளை வரம்பற்றது. அப்பாவி மக்களைப் போன்று குற்றவாளிகளுக்கும் இது சமமாக பொருந்தும்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “சமூகத்தின் சட்டப்படியான தற்காப்புக்கும்கூட, மரண தண்டனையை நிறைவேற்ற பரவலாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அனைத்து கிறிஸ்தவர்களும், நல்லெண்ணம் கொண்டவர்களும் மரண தண்டனையை ஒழிப்பதற்காக பாடுபட வேண்டும். அத்துடன் சிறையின் நிலையை முன்னேற்றுவதற்கும் உழைக்க வேண்டும். அப்போது தான் தங்கள் சுதந்திரத்தை இழந்த மக்களின் கண்ணியத்தை மதிப்பதாக அர்த்தம்” எனவும் கூறினார்.

LEAVE A REPLY