அம்பாறை, மொனராகல மாவட்டங்களை சேர்ந்த புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

0
188

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அம்பாரை, மொனராகல மாவட்டங்களை சேர்ந்த புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று 2016.02.21ஆம் திகதி அம்பாரை டி.எஸ்.சேனாநாயக்க மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாரை,மொனராகலை மாவட்டத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 195 மாணவர்களுக்கு தலா பதினையாயிரம் (15000.00) ரூபாவும், க.பொ.த.சாதாரண தரம் பயிலும் 113 மாணவர்களுக்கு தலா இருபதுனாயிரம் (20000.00) ரூபாவும், உயர் தரம் பயிலும் 17 மாணவர்களுக்கு தலா முப்பதுனாயிரம் (30000.00) ரூபாவும், வழங்கி கௌவிக்கப்பட்டனர்

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரள, மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே ஆகியோருடன் விசேட அதிதிகளாக பிரதியமைச்சர் அனோமா கமகே, முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன மற்றும் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ உட்பட அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

றிசாத் ஏ காதர்

LEAVE A REPLY