அமெரிக்க வீதிகளில் இலக்கின்றி துப்பாக்கிச் சூடு: ஆறு பேர் பலி

0
184

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் கண்ணில் பட்டவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் உணவு விடுதி ஒன்றில் நால்வர் மற்றும் கார் விற்பனையகம் ஒன்றில் இருவரும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்திருப்பதோடு இருவரின் நிலை மோசமாக உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் 45 வயதுடைய ஒருவரே எந்த எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கார் வண்டியில் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரி வீதியில் கண்ணில் பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தி இருப்பதாக பொலிஸார் விபரித்துள்ளனர். இவ்வாறு மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கார் விற்பனையகத்தில் நடத்தப்பட்டிருக்கும் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பதின்ம வயதினர் ஒருவரும் உள்ளார்.

(Thinakaran)

LEAVE A REPLY