ஆசியக்கிண்ணம்- டி20: வங்கதேசம் சென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி

0
196

ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு பயணமாகியுள்ளது. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 24ம் திகதி தொடங்குகிறது. அதேபோல் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் மார்ச் 8ம் திகதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் இலங்கை அணியை 2 தினங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த அணியில் காயத்தால் அவதிப்பட்ட பல சீனியர் வீரர்களுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கிண்ண தொடருக்கு முன் நடக்கும் ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்க இலங்கை அணி வங்கதேசத்திற்கு பயணமாகியுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் விபரம்:-

லசித் மலிங்கா (அணித்தலைவர்), அஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், திலகரத்னே டில்ஷான், நிரோசன் டிக்வெல்லா, ஷீகன் ஜெயசூர்யா, மிலின்டா சிறிவர்த்தனா, தசுன் சனகா, சமரா கப்புகெதரா, நுவான் குலசேகரா, துஷ்மந்தா சமீரா, திசர பெரேரா, சசித்ரா சேனநாயகே, ரங்கனா ஹேரத், ஜெப்ரே வன்டர்சே.

LEAVE A REPLY