அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியில் இருந்து ஜெப் புஷ் விலகினார்

0
138

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிட்டார்.

புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் தனது பிரசாரத்தை தொடங்கிய ஜெப் புஷ், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆதரவு திரட்டி வந்தார்.

தேர்தலுக்கான நிதிதிரட்டுதல் மற்றும் விவாத மேடைகளில் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் பிரசாரத்தின்போது திணறிவந்த ஜெப் புஷ், இயோவா, நியூ ஹாம்ப்ஷைர் பகுதிகளில் நடத்திய பிரசாரக் கூட்டங்கள் படுசொதப்பலாகிப் போனது.

இதையடுத்து, தெற்கு கரோலினாவில் நேற்று நடத்திய பிரசார நிகழ்ச்சியும் படுமோசமாக அமைந்ததால் அதிபர் பதவிக்கான தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார். போட்டியில் இருந்து விலகிய ஜெப் புஷ், களத்தில் நிற்கும் இதர வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY