சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு: 46 பேர் பலி

0
108

சிரியா நாட்டின் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 46 பேர் பலியாகினர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த அலெப்போ நகரை சமீபத்தில் கைப்பற்றிய ராணுவப் படைகள் அடுத்தகட்டமாக வடக்கு நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் உள்ளூர் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சஹாரா மாவட்டத்தின் மையப்பகுதியான ஹோம்ஸ் நகரின் இரு இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY