பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழிலுக்காக தையல் இயந்திரங்கள் கையளிப்பு

0
263

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரனின் 2015ம் வருட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் வறிய நிலையிலுள்ள 7 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழிலுக்காக தலா 22 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் கையளிக்கும் வைபவம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே. லவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கே. ஏகாம்பரம், ஏ. விஜயரெட்ணம், மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் வி. அழகரெத்தினம் ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

20160216_102126 20160216_102214 20160216_102240

LEAVE A REPLY