காத்தான்குடியில் உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான கலந்துரையாடல்

0
271

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவுகள் நேற்று வெள்ளிக்கிழமை விஷமானதால் இதுவரை 51 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்ததோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் தொடராக அவசர கலந்துரையாடலொன்று 2016.02.20 இன்று தற்பொது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY