கல்குடா ஸக்காத் நிதியத்தினால் ஏழைகளுக்கான சகல வசதிகளையும் கொண்ட மாதிரிக் கிராமம்

0
170

கல்குடாவில் அடிப்படை இஸ்லாமிய சிந்தனையுடன் இயங்கி வருகின்ற கல்குடா ஸக்காத் நிதியத்தின் முயற்சியின் பலனாக ஜமாஅத்தே இஸ்லாமியின் பஹ்றைன் நாட்டு சமூக சேவை பிரிவினால் கல்குடா பிரதேசத்தில் வாழுக்கின்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கான சகல வசதிகளும் அடங்கிய மாதிரி கிராமத்துகான அடிக்கல் நடும் நிகழ்வானது இன்று 20.01.2016 சனிகிழமை கல்குடா ஸக்காத் நிதியத்தினால் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் உத்தியோகபூர்வக இடம் பெற்றது.

இம்மாதிரி கிராமமானது முதற்கட்டமாக 27 வீடுகளும் ,அதனோடு சேர்த்து வைத்தியசாலை, கடைத்தொகுதி, மலசல கூடங்கள், குடி நீர்வசதி, மின்சாரவசதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்படவிருப்பது முக்கிய விடயமாகும்.

இந்நிகழ்விற்கு பிரதம அதீதியாக பஹ்றைன் நாட்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைக்கு பொறுப்பானவர் கலந்து சிறபித்ததுடன் கல்குடா ஸக்காத் நிதியத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், கல்குடா பிரதேசத்து பள்ளிவாயல்கள் சம்மேள தலைவர்கள், இலங்கை மற்றும் கல்குடா ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் இணைப்பதிகாரி ஒஸாமா தெளபீக், ஓட்டமாவடியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அஹ்மத் இர்ஷாத்

6c21825d-babc-431f-8d97-d2c6eff1eff0 65b22266-76b4-4895-b355-48ed11a4d87c 87ab77e9-7d03-4ec0-893f-25d8570f791d b04ef31c-2586-420a-aa2c-f643fb5211b6 c62b1cc7-933c-4c0b-90f6-a2aedc646981 c9985837-9895-4297-ab59-ab7d4e8260ee

LEAVE A REPLY