ராஜித சேனாரத்ன மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சி்ங்கப்பூர் விஜயம்

0
179

சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 9.25 மணியளவில் விஷேட விமானம் ஒன்றில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் மேலும் 06 பேர் கூட சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன வைத்திய பரிசோதனை ஒன்றிற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாக அவரின் ஊடகப் பேச்சாளர் நிபுன ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார்.

அவரது உறவினர்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலதிக பரிசோதனைகளுக்காகவே அவர் இன்று சிங்கப்பூர் மெளன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு அழத்துச் செல்லப்பட்டுள்ளார்.

-AD-

LEAVE A REPLY