5 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்தியா- இலங்கை மோதல்

0
282

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய டி20 தொடரின் 2வது போட்டி அதிக பேரால் பார்க்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்தியா டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியை அதிக ரசிகர்கள் தொலைக்காட்சியின் மூலம் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் இது புதிய சாதனையாகும்.

இந்தப் போட்டியை 256 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகம் ஆகும்.

இதற்கு முன்னர் கடந்த 2012ம் ஆண்டு பெங்களூரில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியை 112 மில்லியன் பேர் பார்வையிட்டதே சாதனையாக இருந்தது.

ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியை டோனி தலைமையிலான இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY