ஆசியக்கிண்ணத் தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்

0
110

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் இடது காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காயத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகிறார்.

இதில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அவருக்கு ஆசியக்கிண்ணத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணப் போட்டியில் அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY