ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடி: உலக வங்கி நிதியுதவி

0
316

தென்அமெரிக்கா, கரிபீயன் நாடு களில் ஜிகா வைரஸை கட்டுப் படுத்த உலக வங்கி சார்பில் ரூ.1031 கோடி நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது.

பிரேசில், அர்ஜென்டினா, ஜமைக்கா, டொமினிக் குடியரசு, கியூபா, மெக்ஸிகோ, போர்ட்டோ ரிகோ, எல் சல்வடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை யுடன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளிலும் ஜிகா வைரஸ் பரவியுள்ளது.

தென்அமெரிக்காவை அச்சுறுத் திய ஜிகா வைரஸ் தற்போது ஆசியாவிலும் கால் பதித்துள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட ஆசிய நாடு களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இருந்து ஆசியா முழுவதும் ஜிகா பரவக்கூடும் என்று அஞ்சப்படு கிறது.

இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே வைரஸை கட்டுப் படுத்த உலக சுகாதார அமைப்பு அண்மையில் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.

இந்நிலையில் தென்அமெரிக்கா மற்றும் கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடியே 40 லட்சம் சிறப்பு நிதியுதவியாக வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிதி உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் உள்ளிட்ட ஐ.நா. சார்புடைய அமைப்புகளுக் கும் இதர தொண்டு நிறுவனங்களுக் கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வட்டாரங்கள் கூறியபோது, பாதிக் கப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோ சித்த பிறகு நிதியுதவியை அறிவித் துள்ளோம், தேவைப்பட்டால் கூடுத லாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

உலக வங்கியின் நிதியுதவியில் ஜிகா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருந்தொகை ஒதுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY