தூக்கமின்றி தவிக்கும் அமெரிக்கர்கள்: உடல் பருமன்–இதய நோயால் அவதி

0
169

அயர்ந்த தூக்கம் உடல் நலத்துக்கு சிறந்தது’ என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தூக்கம் கெட்டால் உடல் நலம் பாதித்து பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 மணி நேரமும், அதிகபட்சமாக 8 மணி நேரமும் தூங்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 50 மாகாணங்களில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 306 பேரிடம் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் இரவில் சரியாக தூங்குவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் போதுமான அளவு தூங்குவதில்லை என தெரியவந்துள்ளது. இதனால் உடல்பருமன், நீரிழிவு, இதய நோய்கள், மன நோய்கள் மற்றும் பலவிதமான நோய்களால் அவதிப்படுகின்றனர்.

எனவே, தூக்கமின்மை உடல் நலனுக்கு கேடு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY