(Photo) குருநாகலில் இருந்து கலேவல வரை உள்ள வீதியில் வாகன நெரிசல்: மக்கள் சிரமம்

0
60

குருநாகலில் இருந்து கலேவல வரை உள்ள வீதியில் பாரிய வாகன நெரிசல் தினமும் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த வீதியை சுமார் 5 வருடத்துக்கு மேலாக புனரமைக்கின்றனர். இதனால் இவ் வீதியால் பயணிக்கும் வாகனங்களில் உள்ள மக்கள் சிரமப்படுவதுடன் சொகுசு வாகனம் தவிர்ந்த வாகனத்தில் செல்பவர்கள் வெயில் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை அங்கு காத்திருக்க வேண்டிய நிலைமையும் காணப்படுகிறது.

(முஹமத் அல் நஹியான்)

12596456_10206061535203072_1145741647_n 12736253_10206061534723060_2292327_n 12746191_10206061537963141_1636072269_n 12769512_10206061534763061_1451973210_n

LEAVE A REPLY