கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் உலக தாய்மொழி தினம்

0
248

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் திங்கட்கிழமை உலக தாய்மொழி தினம் (21.02.2016) சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

உலகிலுள்ள மொழிகளுள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ளவும் வருடம் தோறும் 21ம் திகதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.

உலகலாவிய ரீதியாக பேசப்படும் மொழிகள் பொதுமொழி, தாய்மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில் உருது மொழியே அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது.

1952ல் கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதய வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழி ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 1952ம்ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி நடாத்திய தாய்மொழியைப் போராட்டத்தில் பலர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் பலியான மாணவர்களின் நினைவாகவே 1999ம் ஆண்டு இத்தினம் யுனெஸ்கோ ருNநுளுஊழு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.

அத்தோடு ஒரு இனத்தின் தாய்மொழி அச் சமூகத்தின் பல்வகை அம்சங்களை சுமந்து நிற்கின்றது. அத் தனித்துவமான அம்சங்களை பரவலடையச்செய்வது தற்காலத்தில் அவசியமானதாக இருப்பதோடு இக் கொண்டாட்டம் சமூக கலைப் பண்பாட்டு ஊடாட்டமாகவும் அமைகின்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக ஏற்பாட்டில் காலை 09.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணி வரை நிறுவக வளாகம் மற்றும் கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலய வளாகம் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ள பூர்வீகக் குடிகள் மற்றும் பாரம்பரிய இனக்குழுக்கள் சார் கலைஞர்கள் அவர்களது பண்பாட்டுப் பாரம்பரிய அளிக்கைகள் ஊடாக சமூக இருப்பு நிலை, எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த அவர்களது எண்ணக்கருவில் அக்கறை கொள்வதும் உயர்கல்வி நிறுவகமொன்று சமூகத்துடன் கொண்டிருக்கும் நல்லுறவை வலுப்படுத்துவதாகவும், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர் மாணவரை ஆற்றுப்படுத்துவதாகவும் அமைகின்றன.

அதன் அடிப்படையில் இந் நிகழ்வு கொண்டாட்டத்துக்கும் கற்றலுக்கும் உரியதாகின்றது.

இதில் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினரது ஆற்றுகைகள், அளிக்கம்பை தெலுங்கர் மற்றும் களுவங்கேணி வேடர் சமூகங்களின் சடங்குசார் அளிக்கைகள், அம்மந்தனாவெளி வேடர் சமூகத்தின் புலிக்கூத்து, மேலும் இச் சமூகங்களின் கலை, கைவினைப் பொருட்களின் காட்சிப்படுத்தல்கள், அது சார்ந்த கலைஞர்களுடனான கலந்துரையாடல்கள் அத்தோடு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இசைக்குழுவின் ஈழத்துப் பாடல்கள் இசை நிகழ்வு போன்றன இடம்பெறவுள்ளன.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY