தனியார் கல்வி நிலையத்தில் தீ

0
206

மட்டக்களப்பு தாமரைக்கேணி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

கல்வி நிலையத்தின் போதனாசிரியரின் ஆவணங்கள் வைக்கும் நிலைய பகுதியே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் மாணவர்கள் அருகில் உள்ள நிலையத்தில் கல்வி பயின்றுகொண்டு இருந்துள்ளனர். ஆயினும் அவர்களில் எவருக்கும் பாதிப்பேற்படவில்லை.

தீ பரவிய போது ஆசிரியரும், மாணவர்களும் சேர்ந்;து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் கேட்டபோது அங்கு தன்னால் ஏற்றிவைக்கப்பட்ட விளக்குத் திரியினை எலி கொண்டு சென்றதினால் தீ பரவியிருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC_2649 DSC_2650 DSC_2653 DSC_2662

LEAVE A REPLY