கிழக்கு மாகாண திணைக்களங்களின் குறைபாடுகளை தெரிவிக்க புதிய மின்னஞ்சல்

0
171

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத் திணைக்களங்களில் காணப்படும் குறைபாடுகளை பொதுமக்கள் தெரியப்படுத்துவதற்காக talk2epgovernor@gmail.com என்ற புதிய மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்துள்ளதாக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை(19) தெரிவித்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

அத்திணைக்களங்களின் குறைபாடுகள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் எமக்கு தெரியப்படுத்த முடியும்.

குறைபாடுகளை கண்டறிந்து இனிவரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கவே புதிய மின்னஞ்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தங்களுடைய நிர்வாகத்தில் உள்ள குறைகளை கண்டால் உங்களுடைய கருத்துகள், ஆலோசனைகளையும் அனுப்பிவைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

(அத தெரண)

LEAVE A REPLY