வடமாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

0
164

வடமாகாணத்தின் புதிய ஆளுனராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ரெஜியோல்ட் குரே நேற்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடமாகாண அளுனராக இதுவரை கடமையாற்றிவந்த எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து வடமாகாணத்தின் புதிய ஆளுனராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளனர் அலுவலகத்தில் 10.28 மணிக்கு பிறந்த சுபமுகூர்த்தத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வடமாகாண முதலமைச்ர் .சி.வி.விக்னேஸ்வரன் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுன்ற பிரதிக்குழக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான் எம்.ஏ.சுமந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் அங்கஜன் ,ராமநாதன் , மஸ்தான் மற்றும் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY